அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் எமி ஜாக்சன், சமந்தா நடிப்பில் உருவாகி வெளியான 'தெறி'திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளா
இத் திரைப்படம் இந்தி மொழியிலும் 'பேபி ஜான்' என்ற பெயரில் கடந்த வருடம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழில் 'தெறி' திரைப்படம் இந்த மாதம் 15 ஆம் திகதி மீண்டும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு Poster ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட X தள பதிவில், "வரவிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க, 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளார்.
'தெறி' திரைப்படத்தின் Trailer இன்று வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.