சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான "Tourist Family " திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்று, தற்போது "oscar " தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் 'மை லார்ட்'. திரைப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளதுடன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மேலும் 'எச காத்தா' ராசாதி ராசா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.