பின்லாந்து உலகளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வயர்லெஸ் மின்சாரம் தொடர்பான புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கம்பிகள், பிளக், சொக்கெட்டுகள் இல்லாமல், காற்றின் வழியே மின்சாரம் பரிமாறும் தொழில்நுட்பம் தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ளது.
Resonant coupling மற்றும் Magnetic induction ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஹெல்சிங்கி மற்றும் ஆல்டோ பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஆராய்ச்சிகள், எனர்ஜி இழப்புகளை குறைப்பது மற்றும் செயல்திறனை அதிகரிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றன.
மக்னெடிக் லூப் அன்டினாக்கள் மூலம் குறுகிய தூரத்தில் அதிக செயல்திறனுடன் மின்சாரம் பரிமாற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அண்மைய பரிசோதனைகளில், சிறிய இலத்திரனியல் சாதனங்கள் காற்றின் வழியே மின்சாரம் பெற்று இயங்கியுள்ளன.
மருத்துவ சாதனங்கள் (implants) போன்ற சிறப்பு துறைகளில் வயர்லெஸ் மின்சாரம் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.