வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த மற்றும் திறமையான Super கணினியை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Athena’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கணினி, கலிபோர்னியாவின் Ames Research இல் நிறுவப்பட்டுள்ளது.
Athena, நாசாவின் முந்தைய Aitken மற்றும் Pleiades கணினிகளை விட அதிக திறன் கொண்டது என கூறப்படுகிறது.
இது ஒரு வினாடியில் கோடிக்கணக்கான கணக்கீடுகளை செய்யும் திறன் கொண்ட இந்த super Computer மூலம் நாசா தனது ஆராய்ச்சி செலவுகளை குறைத்து, அதிக திறமையான கணினி பயன்பாட்டை பெறுகிறது.
கிரேக்க தேவதை Athena-வின் அறிவும் போர்திறனும், நாசாவின் ஆராய்ச்சி நோக்கங்களுடன் ஒத்துப்போகும் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் புதிய Super கணினி, நாசாவின் அடுத்த தலைமுறை விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான டிஜிட்டல் அடித்தளத்தை சிறப்பாக உருவாக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.