சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமான 'tourist family'இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. மேலும் ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்து முடித்துள்ள 'MY LORD' திரைப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார் , கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளதுடன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இத்திரைப்படம் இந்த மாதம் 13ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.