அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை நவ்யா நாயர். நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திய இவர் தற்போது ஒரு மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.
நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை இயக்குவதில் தான் இனி ஆர்வம் காட்ட போவதாகவும் நவ்யா நாயர் இப்போது தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே ஒரு கதையை அவர் எழுதி இருப்பதாகவும் அதில் சில மாற்றங்கள் செய்து விரைவில் இந்த படத்தை இயக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.