இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் 'ஆவேஷம்'.
ஆவேஷம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், ஆவேஷம் படத்தின் 2 பாகம் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் உருவாகும் என்று நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் சூர்யா47 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பணிகளை முடித்துவிட்டு ஆவேஷம் 2 படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.