T20 உலகக்கிண்ணம் 2026 தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடரின் 31ஆவது போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கனடா முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.
இதனை தொடர்ந்து 174 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனால் இந்த பிரிவில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.