சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோச்சடையான். ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.
கோச்சடையான் வெளியான சந்தர்ப்பத்தில் அத்திரைப்படம் பற்றி எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெருகேற்றப்பட்ட கோச்சடையான் வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ளார் இது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.