தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'Dude' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் குவித்தது.
இந்த நிலையில், நடிப்பு மற்றும் இயக்குநரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய பாதையில் பிரதீப் ரங்கநாதன் பயணிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை சினிமாத்துறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக்க் கூறப்படுகிறது.
தனது தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் கதை, பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இத்திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.