தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அவரது இரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக நேரில் முன்னிலையாகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.