யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'TOXIC' திரைப்படத்தில் நடித்துள்ளார். KVN நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக 'TOXIC' படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்த படத்திலிருந்து இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் இடம்பெற்ற அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் குறித்து இரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது 'TOXIC' படத்தின் FIRST சிங்கிளான "தபாஹி" வெளியாகியுள்ளது. இப்பாடலின் தமிழ் VERSIONஐ இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத விஷால் மிஸ்ரா பாடியுள்ளார்.