இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா பயணிக்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணித் தலைவர் தோனிக்கு ஒய்வு வழங்கப்பட்டது போல, அவரது விரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடையாமையால், இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தோனி விளையாடமாட்டார் என்றும் விராட் கோளியே தொடர்ந்தும் தலைமை தாங்குவார் என்றும் இந்திய தேர்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுஐ விட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக, பிரிஸ்பேனில் டிசெம்பர் மாதம் முதல் வாரம் ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியிலும் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த டெஸ்ட் போட்டியிலும் கோளியே தலைமை தாங்குவார் என்றும் உறுதியாகியுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 19 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் குழுவில் இளம் துடுப்பாட்ட வீரர் ராகுல், சுழல் பந்துவீச்சாளர் கார்ன் ஷர்மா ஆகியோரோடு இரண்டு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.
இதேவேளை உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ந்து பிரகாசித்துவரும் உத்தப்பா இலங்கை அணிக்கு எதிரான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழுவில் இடம்பெற்றுள்ளார்.
அணிகளின் விபரங்கள்-
India Test squad MS Dhoni (capt), Virat Kohli, Shikhar Dhawan, M Vijay, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rohit Sharma, Suresh Raina, Wriddhiman Saha, Naman Ojha, R Ashwin, Karn Sharma, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ishant Sharma, Umesh Yadav, Varun Aaron
India squad for SL ODIs Virat Kohli (c), Ajinkya Rahane, Rohit Sharma, Ambati Rayudu, Suresh Raina, Robin Uthappa, Akshar Patel, Karn Sharma, R Ashwin, Umesh Yadav, Dhawal Kulkarni, Stuart Binny, Vinay Kumar, Kedar Jadhav
ஏஆர்வீ