695 Views
மீண்டும் மோதலில் தல - தளபதி......?????
"தல" ன்னா சும்மாவா....? என்று 'தல' அஜித் ரசிகர்கள் தங்கள் சேட் கொலரை தூக்கிவிடும் அளவுக்கு அட்டகாசமாக வெளியாகியுள்ளது "என்னை அறிந்தால்" படத்தின் விளம்பர முன்னோட்டக்காட்சி. இந்தப் படத்தின் வெளியீட்டுத் திகதியில் குழப்பநிலை காணப்பட்டாலும், நேற்று வெளியான இந்த முன்னோட்டக்காட்சியே தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பெரும் பாராட்டையும் வரவேற்பையும் அள்ளிக்கொண்டுள்ளதாம்.
நேற்றையதினம் YOUTUBE இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட இந்த விளம்பர முன்னோட்டக்காட்சி, வெளியான 24மணித்தியாலங்களுக்குள் 13.5லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கையை தொட்டிருக்கின்றதாம். அதேவேளை இதற்கான LIKES மட்டுமே 41660 என்ற எண்ணிக்கையை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, தீபாவளி அன்று வெளியாகி சூப்பர்ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கும் இளையதளபதி விஜய்யின் "கத்தி" படத்தோடு ஒப்பீடு ஒன்றை மேற்கொண்டு, 'தல' ரசிகர்கள் இளையதளபதி ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளனராம். இதன்படி "கத்தி" படத்தின் விளம்பர முன்னோட்டக்காட்சி ஒக்டோபர் 18-ம் திகதி வெளியாகியதாகவும், அன்றிலிருந்து இன்று வரையான 21/2 மாத காலத்தில் அதற்கான LIKES 32107 என்ற எண்ணிக்கை மட்டுமே என்றும், "என்னை அறிந்தால்" வெளியான 18மணித்தியாலங்களிலேயே இந்த எண்ணிக்கையை கடந்துள்ளதாகவும் சொல்லியிருக்கும் அஜித் ரசிகர்கள் "தல" எப்பவும் "தல" தான் என்றும் கூறியுள்ளார்களாம்.
இந்தநிலையில் தற்போது 'இளையதளபதி' விஜய் ரசிகர்களுக்கும், 'தல' அஜித் ரசிகர்களுக்குமான மோதல் உக்கிரமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
*கணேசமூர்த்தி ராகவன்.