537 Views
தல அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை அறிந்தால். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது.
'அதாரு உதாரு' ஒற்றைப் பாடலின் வெளியீடு எல்லா இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் ஐ உள்பட மேலும் 3 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், 'என்னை அறிந்தால்' திட்டமிட்டபடி பொங்கலுக்கு வருமா என்ற கேள்வி இருந்தது. இப்போது என்னை அறிந்தால் படம் திட்டமிட்டபடி பொங்கல் ஸ்பெஷலாக வரப்போவது உறுதியாகிவிட்டது.
வரும் ஜனவரி 14-ம் தேதி தைப்பொங்கல் நாளில் என்னை அறிந்தால் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அட்மஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
இலங்கை உட்பட வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பாகவே என்னை அறிந்தால் வெளியாகவிருக்கிறது