586 Views
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஷங்கரின் 'ஐ' ஆரம்பம் பிரம்மாண்டம். பெரிய வரவேற்பும், வரவேற்புடன் கூடிய விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
ஐ என்ற இந்த பிரமாண்ட படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் "சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை - புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.
மேலும், இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ’ படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும். உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம்."
இயக்குனர் ஷங்கரும் 'ஐ' பற்றி "உழைப்புக்கு பலனை ரசிகர்கள் அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.