தல அஜித் & கௌதம் வாசுதேவ மேனன் &த்ரிஷா & அனுஷ்கா கூட்டணியில் கடந்த 5ஆம் திகதி வெளியானது என்னை அறிந்தால்!
படம் அப்படி இப்படி என்று பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படாலும், சிறப்பாக இருக்கிறது என்பதே பலரது பொதுப்படையான கருத்தாக இருக்கிறது.திரையரங்க உரிமையாளர்களும் தமக்கு படவசூல் மகில்வளித்துள்ளதாகவே தெரிவிக்கும் நிலையில், நிச்சயம் பார்க்கக் கூடிய படமென நம்பமுடியும்.
பல இடங்களில் வசூல் மூலம் வாரிக் குவித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தரப்பு தகவல்கள்.
இன்னிலையில் ஒரு இந்திய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிக்காக என்னை அறிந்தால் திரைப்பட கூட்டணி கலந்துகொண்டுள்ளது. அஜீத் மட்டும் இல்லை. அப்பொழுது கௌதமிடம் கேட்டார்கள், ஆங்கில திரைப்படங்கள் இயக்கும் ஆசை உங்களுக்கு இல்லையா? யாரை வைத்து இயக்குவீர்கள் ?
இந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த கௌதம் வாசுதேவ மேனன், ஆங்கில திரைப்படங்களை இயக்கும் ஆசை எனக்கும் உண்டு. ஆனால், ஆங்கில நடிகர்களை வைத்தல்ல, நம்ம ஊர் நடிகர்களை வைத்தே நான் இயக்கினால் இயக்குவேன். அதிலும் அஜித் நடிப்பிலேயே எனது ஆங்கிலப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். அவர் சம்மதித்தால் மிக விரைவிலேயே படம் ஆரம்பிக்கப்படும் என்றார்.
இதற்க்கு தல சம்மதம் சொல்லுமா? பார்க்கலாம் பார்க்கலாம் என்பது மட்டுமே நம்மால் முடியும்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-