நம்ம தமிழ் நடிகர் என்று பெருமையோடு பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறிய நடிகர் தனுஷுக்கு இப்பொழுது தமிழில் வாய்ப்புக்கள் கொட்டுவது மாத்திரமின்றி, ஹிந்தியிலும் குவிகிறது. அவரது நடிப்பை ஹிந்தி உலகமும் இரசித்துப் பாராட்டுகிறார்கள். அவரையே பல படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில், 2013இல் வந்த ரான்ச்சனா படத்தின் மூலமாகத்தான், ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படத்தில் நடிகை சோனம் கபூர் ஜோடியாக நடித்திருந்தார். படமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றதாக மாறியுள்ளது. இப்பொழுது, இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களை முடித்து விட்டு, இந்திப் படங்களில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார் தனுஷ்.
அதற்க்கு இன்னும் இலகுவாக இருப்பதற்காக, மும்பையில் வீடும் வாங்கியுள்ளார் தனுஷ். இரண்டு மொழிகளிலும் கலந்து இனி நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-