10,147 Views
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் 70 வயது கிழவி தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் வெளியானபோது பரபரப்பை ஏற்படுத்தியது.லேட்டஸ்ட் தகவலின்படி.. காஞ்சனா – 2 படத்தில் 7 வயது சிறுவனாகவும் லாரன்ஸ் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்ல வேறு பல தோற்றங்களிலும் நடித்திருக்கிறாராம் ராகவா லாரன்ஸ். 7 வயது சிறுவனாக லாரன்ஸ் நடித்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த ராகவா லாரன்ஸின் அபிமான நடிகரான ரஜினிகாந்த்…இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய் உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று பாராட்டினார்.
காஞ்சனா – 2 படம் தமிழ், தெலுங்கு, இரு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது
=== CASTRO RAHUL ===