Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
இளம் இந்திய கிரிக்கெட் வீரனின் மரணத்துக்கு முன்னணி வீரர்கள் பலர் அஞ்சலி தெரிவிப்பு.

Bengal player dies after on-field accident - இளம் இந்திய கிரிக்கெட் வீரனின் மரணத்துக்கு முன்னணி வீரர்கள் பலர் அஞ்சலி தெரிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,887 Views

இளம் இந்திய கிரிக்கெட் வீரனின் மரணத்துக்கு முன்னணி வீரர்கள் பலர் அஞ்சலி தெரிவிப்பு.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயதான இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் கேசரி களத்தடுப்பின் போது சக வீரருடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்தார்.


கடந்த நவம்பர் மாதம் 25 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் எகிறிக் குதித்த பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளம் கிரிக்கெட் வீரர் களத்தில் அடிபட்டு உயிரை இழந்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொல்கத்தாவில் கடந்த 17 ம் திகதி இடம்பெற்ற உள்ளூர் போட்டியில்
எதிரணி வீரர் அடித்த பந்தை ஸ்வீப்பர் கவர் திசையில் இருந்த அங்கித் கேசரி பிடிக்க முயன்றார்.

அதேநேரம் பந்து வீச்சாளரும் அதனை பிடிக்க முயற்சித்தார். இருவரும் பந்தையே நோக்கிக்கொண்டு ஓடியதால் பலமாக மொதுண்டனர்.இதில் அங்கித் கேசரியின் வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார்.

ஆயினும் 3 நாட்கள் இடைவெளியில் நேற்று அவர் உயிர் பிரிந்தது கிரிக்கெட் உலகினருக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.

வளர்ந்து வரும் ஓர் திறமையான வீரரான இவர் ,19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெங்கால் அணியின் தலைவராகவும்  இருந்துள்ளதோடு , 2014 ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான  உலகக் கிண்ணத்துக்கான இந்தியாவின் 30 பேர் கொண்ட உத்தேச அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் மூத்த வீரர்கள் பலரும் இந்த வீரர் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளதோடு காம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணியினர் இந்த வீரரின் குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

அத்தோடு நேற்றைய கொல்கொத்தா மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான IPL போட்டியின் போது மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top