Farmer who ate coins - உலோகங்களை உட்கொண்ட இந்திய விவசாயிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,277 Views
இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ராஜ்பால் சிங் என்ற 34 வயது விவசாயி ஒருவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ராஜ்பால் சிங் என்ற 34 வயது விவசாயி ஒருவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இருகட்டத்தில் வலி எல்லைமீறி செல்லவே அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.
இந்த வயிற்று வலி உணவு நச்சு அல்லது வேறு எதாவது நோய் காரணமாக இருக்கலாம் என்று பரிசோதித்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், ராஜ்பால் சிங்கின் வயிற்றை எக்ஸ் - ரே செய்து பார்த்ததில், எண்ணற்ற உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 3 வருடங்களாக மன உளைச்சல் காரணமாக ராஜ்பால் சிங் உலோக பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளார். இதுவரை அவர் நாணயங்கள், உலோக ஆணிகள் , நட்டுக்கள், பட்டரிகள் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார்.
இவற்றை பால் மற்றும் பழச்சாற்றுடனேயே அவர் உட்கொண்டுள்ளார்.
இந்த உலோக பொருட்களை அகற்றும் சுமார் 240 செயல்முறைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளார். எனினும் இன்னும் சில அவரது உடலில் எஞ்சியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.