ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹாம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் காட்களை இந்த இயந்திரத்தில் செலுத்தினால், 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு 10 நிமிடமும் தங்கத்தின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிவிக்கும் இந்த இயந்திரத்தின் மேற்பகுதி முழுவதும், தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஒரு இணைய வர்த்தக நிறுவனம், இந்த வணிகத்தை செய்து வருகின்றது. அங்கிருந்து தருவிக்கப்படும் சொக்கத்தங்கத்தில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலின் அடையாள முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. புதிய உத்தியில் செயற்படுத்தப்படும் இந்த வியாபாரத்தில் பயனடையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
புதுசுக்கு எப்போவும் மவுசு உண்டுப்பா
-கோடம்பாக்கக் குருவி-