511 Views
உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்கு காரணம். அனுஷ்கா தான் எனவே அவர் வீட்டு மீது கல்லெறியுங்கள் என்று தேஷ்துரோகி பட நடிகர் கமல் ரஷித் கான் ரசிகர்களைத் தூண்டியுள்ளார்.
மேலும் கேவலமான கமெண்டுகளையும் அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டு பார்க்கும் நபர்தான் இந்த கமல் கான்.
இந்திப் பட உலகில் முதல்நிலை நடிகையான அனுஷ்கா சர்மாவை இப்போது வம்புக்கிழுத்துள்ளார்.
அவர் சிட்னி போனதால்தான் விராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை என்றும், அதனால் அனுஷ்கா வீட்டின் மீது ரசிகர்கள் கல்லெறிய வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இனி அனுஷ்கா சர்மா நடிக்கும் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
விராட் கோஹ்லியை மிக மட்டமாக கிண்டலடித்துள்ளார்.
"சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோஹ்லி என மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் ஏன் விளையாடப் போகிறார்?"
-இதெல்லாம் டூ டூ மச்!
=======CASTRO RAHUL =======
291 Views
260 Views
320 Views
564 Views

297 Views
283 Views
282 Views
306 Views
268 Views
279 Views
284 Views
245 Views
393 Views
ரஜினியின் அடுத்த படம் யாருக்கு... அடுத்து அவர் நடிக்கப் போவது ஆக்ஷன் படமா? காமெடிப் படமா என்றெல்லா்ம் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் சூப்பர் ஸ்டாரோ அமைதியாக, கிரேசி மோகனைச் சந்தித்து காமெடியாக ஒரு கதை தயார் பண்ணுங்கள் என்று கூறியிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.
‘தில்லுமுல்லு', ‘தம்பிக்கு எந்த ஊரு', ‘குரு சிஷ்யன்', சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் ரஜினியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு போயின . குறிப்பாக குழந்தைகள்.
சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் ‘சீரியஸ் டைப் படங்களாகவே அமைந்தன. ‘சிவாஜி', ‘எந்திரன்', ‘கோச்சடையான்', ‘லிங்கா' போன்ற வகை கதைகளைத் தவிர்த்து, முழுக்க முழுக்க காமெடியாக இந்தக் கதை அமைய வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாம்.
கமலின் ஆஸ்தான எழுத்தாளர் என்றாலும், ரஜினிக்குப் புதியவரல்ல கிரேஸி. ஏற்கெனவே ரஜினியின் அருணாச்சலத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
அருணாச்சலம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படமாகும்.
407 Views