ரசிகர்கள் மனம் கவர் நடிகை என்ற கருத்துக் கணிப்பில் ஷ்ருதி ஹாசன் முதல் இடத்தில் உள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியிருந்தது.
இதில் அதிகமானோர் ஷ்ருதி ஹாசனுக்கு வாக்களித்திருந்தனர்.
ஷ்ருதி ஹாசன் சமீபத்தில் நடித்து வெளியான திரைபடங்கள் அனைத்தும் சுப்பர் ஹிட்டான நிலையில், இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் இப்போது தமிழில் 'பூஜை' படத்தில் நடித்துக்கொண்டிருகின்றார், இது தவிர ஹிந்தியில் நான்கு திரைப்படங்கள் கைவசம் உள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில்
ஷ்ருதி ஹாசனுக்கு அவ்வளவான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

அண்மைக்காலமாகவே ஷ்ருதி அதிக பரபரப்பைக் கிளப்பிய நாயகியாக இருந்திருந்தார் என்பது அவரது பெயரை எப்போதும் கிசுகிசுக்களிலும் தலைப்புச் செய்திகளிலும் வைத்திருந்தது.
தெலுங்கு படமொன்றில் கவர்ச்சி மழையில் ரசிகரை நனைய வைத்தது, பின்னர்
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் காதல் என்ற கிசுகிசு..
இப்படி எங்கே பார்த்தாலும்
ஷ்ருதியே பேச்சு.
இக்கருத்துக்கணிப்பில் தமன்னா 2ம் இடத்திலும், நயன்தாரா, காஜல் அகர்வால், ஷ்ரேயா, ஆகியோர் முதல் 10 இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
கடந்த வருடம் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதலிடத்திலிருந்த சமந்தா 12 ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை சமந்தா ரசிகர்களுக்கு கவலையான விடயம் தான்.