தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது எனலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் பல படங்கள், நடிகர்கள் அறிமுகமாகி வருகிறது.
இயக்குனர் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கோடம்பாக்கத்திலுள்ள முக்கால்வாசி நட்சத்திரங்கள் நடிப்பது போல தோன்றுகிறது. எனவே, பல நடிகர்களுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக மாறும் என்பதில் மாற்றமில்லை என்கிறது படக்குழு.
-கோடம்பாக்கக் குருவி-