காவல்துறை நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினரிடம் வாக்குமூலம் அளிக்கவிருந்த முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதனை இன்று அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தாம் வாக்குமூலம் அளிப்பதற்கு வேறு தினம் ஒன்றை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது அல்லவென தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர், உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை கைது செய்யப்பட்ட தியவடன நிலமே நிலங்க தேல காவல்துறை நிதிமோசடி தவிர்ப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தலதா மாளிகையின் நிதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாகவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.