இந்த சம்பவம் அங்குள்ள அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது........
சிம்பாவேயில் சிருமன்சு (Chirumanzu) என்ற கிராமம் உள்ளது.
அங்குள்ள மக்கள் மிகுந்த வறுமையின் மத்தியில் தமது வாழ்வை நகர்த்தி வருகின்றார்கள்.
அங்குள்ள சிறார்கள் பாடசாலைக்கு சென்றாலும் அவர்களுக்கு தேவையான போதிய வசதியின்மை காரணமாக இந்த மாணவர்கள் தங்களை பாலியல் லஞ்சம் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை தங்களது இச்சைக்கு பயன்படுத்தும் சுரங்க தொழிலில் ஈடுபடும் ஆட்கள், இந்த பாலியல் உறவிற்கு அமெரிக்க டொலர் பெறுமதியில் பணத்தை வழங்குகிறார்கள்.
இந்த அமெரிக்கா டொலர் பணத்திற்கு மயங்கும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் தங்கள் வாழ்வை படிப்பறிவின்மை வறுமை காரணமாக இவ்வாறு நகர்த்தி வருகிறார்கள்.
இந்த உண்மை நிலையை அங்குள்ள HIV தடுப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் அந்த அமைப்பு, இந்த தவறான நடத்தையால், மாணவிகளின் சீரழியும் வாழ்வை காப்பாற்ற பெற்றோரும் அரசியல் தலைவர்களும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கம் வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவிகள் அனைவரும் சுமார் 10 மாதங்களுக்குள் இவ்வாறு கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பமாகிய மாணவிகளில் சிலர், தமது கல்வியை நிறுத்தியும் உள்ளனர்.