இறுதி யுத்தத்தில் பலியானவர்களுக்கான நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் முற்றவெளி உலக தமிழ் ஆராச்சி மாநாட்டு நினைவு தூபிக்கு முன்னாள் இந்த நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சுகிர்தன் உள்ளிட்டோரும், இறந்தவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.