ஜப்பானின் டோக்கியோவில் குழந்தை ஒன்று வெறும் பீட்ரூட் ஒன்றின் நிறைக்கு சமமாக பிறந்து, அதிசயிக்க வைத்துள்ளது.
அந்த அதிசய குழந்தையின் நிறை வெறும் 268g என மருத்துவர்கள் கணித்துள்ளார்கள். இவ்வளவு குறைவான நிறையுடன் பிறந்தமை காரணமாக உலகத்திலேயே பிறந்த மிகவும் சிறிய குழந்தை என்ற சிறப்பை இக்குழந்தை பெறுகின்றது.
டோக்கியோவில் உள்ள கெயோ பல்கலைக்கழக மருத்துவமனையில், 24 வாரத்தில் ஜப்பானியத் தாய்க்குப் பிறந்த இந்த ஆண் குழந்தை, பிறக்கும்போது வெறும் 268 கிராம் நிறையில் இருந்துள்ளது. சராசரி இளைஞரின் கைக்குள் அடங்கிவிடக் கூடிய அளவுக்கு சிறியதாக குறித்த குழந்தை இருந்தது.
இதற்கு காரணம் கருப்பையில் குழந்தை வளர்வது நின்றமையே என்று கூறப்பட்டுள்ளது. குழந்தை வெறும் 268g நிறையுடன் பிறந்தமை காரணமாக 5 மாதங்களுக்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தை தற்போது 3k.238g நிறையுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த நிலையில் குழந்தையை வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த அதிசயக் குழந்தை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் தகேஷி அரிமித்சு,குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கினோம். குழந்தை சிறியதாகப் பிறக்க நேர்ந்தாலும் மேம்பட்ட சிகிச்சை மூலம் தற்போது நல்ல நிலைமையில் வீடு திரும்ப முடியும் என்றார்.
குழந்தையின் தாயர் கூறுகையில்........ இப்போது என்னால் மகிழ்ச்சி என்று மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் உண்மையாக அவனால் உயிர் வாழ முடியும் என்பதை அப்போது நான் நம்பவேயில்லை என்று நெகிழ்ந்து பேசியுள்ளார். இதனிடையே, முன்னதாக கடந்த 2009-ல் ஆண் குழந்தை ஒன்று, 274 கிராம் நிறையுடன் பிறந்ததே உலக சாதனையாக இருந்தது.
ஜெர்மனியில் 2015-ல் 252 கிராம் நிறையில் பிறந்த பெண் குழந்தை, நலமுடன் இருந்து சாதனை படைத்துள்ளது. எவ்வாறு இருப்பினும் நிறை குறைந்து பிறகும் குழந்தைகளில் பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைகளுக்கு உயிர் வாழும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில் ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.