Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
மீண்டும் சிக்கலில் சிக்கிய வைகைப்புயல்!!!

Sooriyan gossip - மீண்டும் சிக்கலில் சிக்கிய வைகைப்புயல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,951 Views
கடந்த சில தினங்களுக்கு முன் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலுவின்  பேய் மாமா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்களை குஷி படுத்தியது.  

இப்போது பேய் மாமா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காரணம் இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடங்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் ஆரம்பமாகி 10 நாட்களிலேயே அப்படம் நின்றுபோனது.

வடிவேலுவிற்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே அப்படம் நிற்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணானது.
தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் வடிவேலுவை யாரும் புதிய படத்தில் நடிக்க அணுகக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சக்தி சிதம்பரத்தை அழைத்துப் பேசி, பேய்மாமா படத்திற்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடித்துக் கொடுத்தபிறகே வடிவேலு வேறு புதிய படங்களில் நடிக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதோடு, புதிய படத்திற்காக வடிவேலுவை அணுகிய சில இயக்குநர்களையும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைத்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் வடிவேலு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top