அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், விமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க Idea கேட்டமை தொடர்பிலான செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகின்றன.
''அலெக்ஸ் ஜாக்குவாட்'' என்ற 10 வயது சிறுவன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த குவாண்டஸ் விமான நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றின் மூலம் தனது ஆசை தொடர்பிலான ஆலோசனையை பெற முயன்றுள்ளான்.
குறித்த கடிதத்தில், விமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்றும், தனக்கு கிடைக்கும் பாடசாலை விடுமுறையில் தான் சொந்தமாக ஆரம்பிக்கும் விமான நிலையத்தில் பணியாற்றவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
மேலும் விமான நிறுவன செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களையும் கேட்டு எழுதியுள்ளான். இதற்கு பதிலளித்துள்ள குவாண்டஸ் விமான நிறுவனம், போட்டியாளர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை என வேடிக்கையாக பதில் அனுப்பியதுடன், ஒரு தலைமை செயல் அதிகாரி, மற்றொரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரியுடன் ஆலோசனை செய்கிறார் என்றும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி உள்ளது.
அது மாத்திரமன்றி நேரில் வருமாறும் குறித்த சிறுவனுக்கு குவாண்டஸ் விமான நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.