வட மேற்கு பிரான்சில், ஒரு பண்ணையில்,மூவாயிரம் கோழிகள், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளன.ஒரு நாள் ஒரு இளம் நரி ஒரு வழியாக, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
நரியார் உள்ளே நுழைந்ததும் கதவுகள் மூடிக்கொண்டன. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
அந்த நரியின் உடல் , கோழிக் கூண்டு பகுதியின் மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோழிகளிடம், அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால், அவை அந்த நரியை அப்படியே குத்திக் கொன்றிருக்கின்றன எனக் கூறுகிறார் விவசாயப் பள்ளியின் துறைத் தலைவர் பாஸ்கல் டேனியல்.
கோழிகளிடம் சிக்கி, பாவம்.... அந்த அப்பாவி இளம் நரி, தனது உயிரை மாய்த்துள்ளது.