திரை துறைக்கு வந்து சில படங்களில் நடித்து திருமண பந்தத்தில் இணைந்தவர் ஷாயிஷா. கஜினிகாந்த் படத்தில் நடிக்கும்போது ஆர்யா ஷாயிஷா இடையே காதல் மலர்ந்தது.
கந்த மாதம் 14ம் திகதி தங்களது காதலை உறுதிப்படுத்தினார்கள்.இந்த மாதம் 10ம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள் இந்நிலையில், திருமணத்துப் பிறகு ஆர்யா - சயிஷா இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘டெடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, சக்தி செளந்தர்ராஜன் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.