மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல திரைப் படங்களை இயக்கிய விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு, காதல் திருமணம் இடம்பெற்றது. எனினும் இவ்விருவருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டதால், திருமணமான ஒருவருடத்திலேயே, இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த தினம், இயக்குனர் விஜய்க்கும், நடிகை சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், வெகு விரைவில் இவர்களுக்கு திருமணம் இடம்பெறவுள்ளதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எனினும் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என, இயக்குனர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் இதுவரை இரண்டாவது திருமணம் குறித்து சிந்திக்கவில்லை என, இயக்குனர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.