Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - ஆண்ட்ரியாவும் இணைந்தார்.

Sooriyan Gossip - "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - ஆண்ட்ரியாவும் இணைந்தார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,542 Views
ஹொலிவூட் திரையுலகின் உலகத் தர ஆங்கிலத் திரைப்படமான "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" திரைப்படம்  எதிர்வரும்  26ம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் மொழியாக்கத்துடனான வெளியீட்டிற்கும் தயாராகின்றது.

ஹொலிவூட்டின் பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான 'மார்வெல் ஸ்டூடியோஸ்' தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், உலகப்பிரபல இசையமைப்பாளரும், ஒஸ்கார் நாயகனுமான 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" எனும் இந்தப் படத்திற்கான Marvel Anthem எனும் பாடலை ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வழங்கியுள்ளார்.

குறித்த Marvel Anthem பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் Marvel Anthem பாடல் வெளியீட்டில் கலந்துகொள்ளக் காரணம் என்ன என்ற கேள்வி படத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தோன்றியிருந்தது. இதுபற்றி அறிந்துகொள்ள அவர்கள் இருவரிடமும் கேட்டபோது, தமிழ் மொழியாக்கத்தில் வெளியாகவுள்ள "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் நடிகர் விஜய்சேதுபதி Iron man பாத்திரத்திற்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளதாகவும், ஆண்ட்ரியா Black widow கதாபாத்திரத்துக்கான டப்பிங் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வரவிருக்கும் இந்தப் படத்தின் தமிழாக்கத்துக்கான வசனத்தை பிரபல இயக்குர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளமை, தமிழ் ரசிகர்களிடம் இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொடுக்கும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top