ATM இயந்திரங்கள் மூலம் தவறான முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் பல செய்திகளை நாம் அடிக்கடி அறிந்து வருகின்றோம். இவ்வாறான ATM கொள்ளையில் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று, பிரேசிலில் பாதிவாக்கியள்ளது.
சுமார் 11 கொள்ளையர்கள் பெருமளவான பணத்தொகையை கொள்ளையடிப்பதற்காக, வங்கி ATM இயந்திரத்தை தகர்க்க முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பிரேசிலில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
பிரேசிலின் கிழக்கு நகரமான கவுரேரெமா நகராட்சியில், உள்ள இரண்டு வங்கிகளில் ATM இயந்திரத்தைத் தகர்த்து, கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றது. இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்பே அறிந்திருந்த
பிரேசில் ராணுவ காவல்துறையினர், அவர்களைச் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், குறித்த கொள்ளையர்களோ தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதன்போது 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் சில கொள்ளையர்கள் தப்பிச் சென்று, அருகில் உள்ள வீட்டுக்குள் நுழைந்துகொண்டு அவ்வீட்டில் உள்ளவர்களை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்கள். இதன்போது சமயயோசித்தனமாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், குறித்த பணயக் கைதிகளை மீட்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதே தெருவில் இருந்த மற்றுமொரு வங்கியிலிருந்து தப்பிச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் 25 பேர் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது .
இதனைத் தொடர்ந்து வங்கிப் பகுதியைச் சுற்றி நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஏழு பெரிய துப்பாக்கிகள், நான்கு பிஸ்டல்கள், வெடிகுண்டுகள், குண்டு துளைக்காத ஆடைகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளார்கள்.
இச்சம்பவம் குறித்து பிரேசில் தொலைக்காட்சி ஒன்று இக்கொள்ளையர்கள் காவல் நிலையம் அருகேயுள்ள வங்கி ஒன்றையும் அதே தெருவில் உள்ள இன்னொரு வங்கியையும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றதாக, செய்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.