உண்மையிலேயே கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றாரா? என்ற கேள்வியுடன், முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வரலாற்று ரீதியாக இயற்பியலாளர்களும், தத்துவவாதிகளும் நேரத்தை ஒரு நிலையானதாக கருதினார்கள். கடந்த காலத்திலிருந்து தற்போதைய மற்றும் வருங்காலத்தில் நிகழும் சம்பவங்களை பற்றிய எண்ணக்கருக்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த நிலையில், Waterloo பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் முன்னணி பல்கலைக்கழகம், எகிப்தில் உள்ள
Alexandria பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, இந்த ஆய்வை நடத்தின.
மத நம்பிக்கை உள்ளவர்களின் மூளையின் ஒரு பகுதியை ஆய்வு செய்து, விஞ்ஞானிகள் கடவுள் இருப்பது உண்மையா என்ற கேள்விக்கு விடையளிக்க முயல்கிறார்கள். கடவுள் மிக உயர்ந்தவராக இருப்பார். உயிர்களின் வாழ்க்கையை உருவாக்கியவர் அவரே என வரலாறுகள் கூறுகின்றன.
பெரும்பாலான மாமனிதர்களின் ஆழ்மனதில், கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக தீராத நம்பிக்கை உள்ளது. கடவுள் உண்மையானவர். சர்வவல்லமை படைத்தவராக இருக்கிறார் என்பதை, பலர் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்கள் என, மேற்படி பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே Philadelphia வில் உள்ள நரம்பியல் நிபுணர் ஆண்டி நியூபெர்க் மேற்கொண்ட ஒரு பரிசோதனையின் மூலம், கடவுள் இருப்பது உண்மையா? என்பதை அறிந்து கொள்ள முடியும் என, கூறப்படுகின்றது.
ஆண்டி நியூபெர்க் 12 நிமிடங்கள் பிரார்த்தனையில் இருந்த போது, அவரது மூளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. கதிரியக்க சாயலைப் பயன்படுத்தி, கடவுளை பற்றி நினைக்கும் போது மூளையில் நிகழும் வினோதமான நிகழ்வுகளை கண்காணிக்க முடியும்.
மனித மூளையைப் பார்க்கையில், மக்கள் மத அல்லது ஆவிக்குரிய நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கும் போது, நாம் கணிசமான வேறுபாடுகளை காணலாம். நாம் கடவுளைப் பற்றி நினைத்து, கடவுளை அனுபவித்து, கடவுளை வணங்கும் போது நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம் என, ஆண்டி நியூபெர்க் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த ஆய்வின் உறுதியான முடிவுகள் வெளிவருவதற்கு தாமதமாகும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.