அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர் ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியுடன் அலுவலகத்தினுள் நுழைந்துள்ளார்.
இவ்வாறு துப்பாக்கியுடன் நுழைந்த அவர், தனது கண்ணில் பட்ட சக ஊழியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார். இதன்போது 12 பேர் பலியாகியதுடன், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய குறித்த நபரை காவலுக்கு இருந்த காவலர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளார்கள். இந்த மோசமான தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மாத்திரம், சுமார் 52,385 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். அவற்றில் 307 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானது என்று, புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.