இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்றட்’ கிரிக்கெட் தொடரின் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்றட்’ கிரிக்கெட் தொடரின் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதியன்று நடைபெற்ற 'தி ஹண்ட்றட்' கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலத்தில் 50,000 ஸ்ரேலிங் பவுண் வரைபின் கீழ் பெயரிடப்பட்டிருந்த வனிந்து ஹசரங்க, ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுணுக்கு மென்செஸ்டர் ஒரிஜினல் அணியால் வாங்கப்பட்டார்.
'தி ஹண்ட்றட்' கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயத்திற்காக 22 இலங்கை வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பினும், வனிது ஹசரங்க மாத்திரமே ஏலத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 03 முதல் செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.