உலகம் முழுவதும் இணைய வழியிலான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுதல்,மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் உள்ளது.
இந்த மாதிரியான தாக்குதல்கள் பல இடங்களில் நடந்து கொண்டு இருக்கின்றது.இந்த நிலையில், Microsoft நிறுவனம் இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்காக புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை Windows11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.