தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா, கார்த்தி. அந்தவகையில் இருவரும் தனித்தனியே பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து பல முன்னெடுப்புகளையும் செய்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா அகரம் எனும் பவுண்டேஷனையும், நடிகர் கார்த்தி உழவன் என்ற அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடாத்தி வருகின்றனர்.
இவர்களின் சொந்த நிறுவனங்களிலேயே இருவரும் அதிக படங்களில் நடித்து வருவதனால், அவர்களின் வியாபாரத்தை மேலும் பெருக்கவும் இதன் மூலம் அவர்கள் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.