கடந்த பெப்ரவரி மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது டி20 போட்டியின் போது தீபக் சஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதற்கிடையே, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் எகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தீபக் சஹர் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதற்கு தீபக் சஹர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சஹர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், அடுத்த சீசனில் முன்புபோல் வலிமையுடன் களமிறங்குவேன். தனக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரசிகர்களின் ஆசிர்வாதம் தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.