நாகசைத்தன்யாவும் -சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
விவாகரத்துக்கு பின்னர் நாகசைத்தான்யாவும் சமந்தாவும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் நாகசைத்தான்யா மீண்டும் திருமணத்திற்கு தயாராக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாகசைதன்யாவின் பெற்றோர் நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்கு நாகசைத்தான்யா தன்னுடைய சம்மதத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதாவது நடிகையை திருமணம் செய்ய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.