Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
ஏலக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

Sooriyan Gossip - ஏலக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
ஏலக்காய் அதிக விலைமதிப்புக் கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.

அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பழங்காலம் தொட்டு இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் Vitamin A ,Vitamin C, கல்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஏலக்காய் சாற்றில் Antioxidantகள் அதிகம் உள்ளன, இது இரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.

நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையைக் கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையை முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.

வயிற்றுப் பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரைத் தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.
உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?

கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.

உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.

நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, தூக்கத்திற்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கறுப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top