சினிமா திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் விறுவிறுப்பாக செயற்பட்டு வருகிறார்.இதேவேளை ஒரு ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, ‘ஹிந்தியில் நான் ‘ஓ சாத்தி சால்’ திரைப்படத்தினை இயக்குவதன் மூலம், அங்கு முதன் முதலாக இயக்குனராக களமிறங்கி இருக்கிறேன். இத்திரைப்படமானது ஒரு உண்மையான காதல் கதையாகும்.எனக்கு முன்னரே ஹிந்தி திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது .
ஆனால் அதனை தவிர்த்து கொண்டே வந்தேன். இப்போது நான் மீண்டும் களமிறங்கியுள்ளேன். இதேவேளை எல்லோரும் அப்பாவை வைத்து எப்போது திரைப்படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு அந்த எண்ணம் கிடையாது. நான் அவரது ரசிகையாக இருந்தாலே போதும். அதை எப்போதும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள்" என கூறியள்ளார்.