தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு அக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா,அண்மையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலானது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சம்மந்தமான வேலைகளில் அக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தன்னுடைய செல்பி போட்டோவை பகிர்ந்து நோ பில்டர் என கேப்சன் கொடுத்துள்ளார்.அவரின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் பியூட்டி,எப்பவும் இப்படியே பாசிட்டிவ்வா இருங்க என பாராட்டி தள்ளி வருகின்றனர்.

தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட்,யோக பயிற்சி என பிசியாக உள்ளார்.