Android பொருட்களில் Call Recording சேவையை வழங்கி வரும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நடவடிக்கையினை மே மாதம் 11ம் திகதி முதல் செயற்படுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Google Play Storyல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் புதிய மாற்றம், Android தளத்தில் Call Recording வசதியை நீக்கி விடும் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக Play Storyல் உள்ள செயலிகளினால், Call Recording சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வகையில், மே 11, 2022 ஆம் தேதி முதல் பில்ட்-இன் கால் ரெக்காடர் வசதி இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயனர்களால் கால் ரெக்காடிங் அம்சத்தை பயன்படுத்த முடியாது. புதிய மாற்றங்கள் மூன்றாம் தரப்பு Call Recording செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும்.