2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.
இந்த திரைப்படம் தற்போது தமிழிலும் வெளியாக உள்ளது.இந்த திரைப்படம் தமிழ் மொழியில் ‘கூகுள் குட்டப்பா’ எனும் பெயரில் வெளியாக உள்ளது.மேலும் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் நடிக்கிறார்.
மேலும் இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியினை படக்குழு அறிவித்துள்ளது.அதனடிப்படையில் இப்படம் அடுத்த மாதம் அதாவது மே மாதம் 6ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.