அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அபர்ணா தாஸ் கூறியதாவது,
என் பிறந்தநாள் அன்று நான் பீஸ்ட் ஷூட்டிங்கில் இருந்தேன்.வேலை பார்க்கும் இடத்தில் என் பிறந்தநாளை கொண்டாடியது இது தான் முதல் முறை.
இன்று அபர்ணாவின் பிறந்தநாள்.அதனால் எங்களை எல்லாம் உங்களின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்கிறீர்களா என சதீஷ் கேட்டார்.உடனே ஓகே சொல்லிவிட்டார் விஜய் சார்.காரில் சென்றபோது வாத்தி கமிங் உட்பட அவரின் பிற பாடல்களை கேட்டுக் கொண்டே சென்றோம்.அதை மறக்கவே முடியாது.
நடிகர் விஜய்யை மிகவும் மதிக்கிறேன்.அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார்.எப்பொழுது என்னிடம் பேசினாலும் மரியாதை கொடுத்து பேசுவார்.படப்பிடிப்பு தளத்திற்கு என் அம்மா வந்த போது அவரிடம் நன்றாக பேசினார்.
அவரிடம் இருந்து ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன்.அதாவது,எவ்வளவு வளர்ந்தாலும் தன்மையாக இருக்க வேண்டும் என்பது தான்.விஜய் சார் ரொம்ப சிம்பிளானவர்.அவரிடம் எல்லாமே இருக்கிறது.அவர் நினைத்தால் பந்தா காட்டலாம்.ஆனால் விஜய் சார் அப்படி இல்லை என்றார் அபர்ணா தாஸ்.