முகம் எப்போதும் வெண்மையாக இருக்க வேண்டும் எனவும் முகப்பரு , கரும்புள்ளி , எண்ணெய் வழிதல் போன்ற பிரச்சினைகள் இருக்காமலும் எனவும் ஒப்பனை இல்லாது இருக்கவும் முகம் அழகாக இருக்க வேண்டுமெனவும் விரும்பினால் இயற்கையான முறையில் அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
இதற்கு சமையல் அறையிலுள்ள இரண்டு பொருட்கள் மட்டும் போதும். அதற்கான ஜெல்லை தயார் செய்யலாம். முதலில் ஒரு மிக்ஸியை எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி சோம்பு ஆகிய இரண்டையும் ஒன்றாக போட்டு பொடி செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு குவளை அளவு தண்ணீரை ஊற்றி இந்த பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ஒவ்வரு தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது வெந்தயம், சோம்பு ஆகியவற்றில் இருக்கும் 'எசன்ஸ்' அந்த தண்ணீரில் நன்றாக இறங்கி இருக்கும்.
பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். கால் குவளை அளவிற்கு இந்த தண்ணீர் கிடைத்தாலே போதும். இதனை ஒரு போத்தலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாது.
வெளியே வைத்தால் மூன்று நாட்கள் தான் கெட்டுப்போகாது இருக்கும். இதனை எப்போதும் இரவில் தூங்கு முன் முகத்திற்கு பூச வேண்டும். லேசாக இந்த கிரீமை முகத்தில் ஆங்காங்கே பூசி மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் மெதுமெதுவாக ஊறிவிடும். மறு நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவி கொள்ளலாம்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவர சருமத்தின் நிறம் படிப்படியாக வெள்ளையாக மாறிவரும். கரும்புள்ளிகளும் முகப்பருக்களும் குறைந்துவரும். ஒரு மாதத்தினுள் சிறந்த மாற்றத்தை காணலாம். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முக அழகை பேணலாம்.